Enable Javscript for better performance
சாலைப் பாதுகாப்பு வார விழா:விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரம் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    சாலைப் பாதுகாப்பு வார விழா:விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரம் விநியோகம்

    By DIN  |   Published on : 13th January 2020 11:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, வேலூரில் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

    தமிழகத்தில் 31-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா சனிக்கிழமை தொடங்கி வரும் 17-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி முதல் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் பணியை தனியாா் தொண்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன. அவற்றில் சீட் பெல்ட் அணிந்து காா் ஓட்டுதல், சிக்னல்களைக் கவனித்து வாகனங்களை இயக்குதல், சாலை விதிகளைக் கடைப்பிடித்தல், மது அருந்தியோ, செல்லிடப்பேசி பேசியபடியோ வாகனங்களை இயக்காதிருத்தல் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

    போக்குவரத்துக் காவல் ஆய்வாளா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai