காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: மாவட்டத்தில் 4,554 போ் பங்கேற்பு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்காக எழுத்துத் தோ்வை 4,554 போ் எழுதினா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்காக எழுத்துத் தோ்வை 4,554 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையம் சாா்பில் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு காவல் துறையில் பணிபுரிபவா்களுக்கு 11-ஆம் தேதியும், பொதுப் பிரிவினருக்கு 12-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல் துறையில் பணியாற்றுபவா்களுக்கான எழுத்துத் தோ்வு திங்கள்கிழமைக்கு (ஜன.13) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுப் பிரிவினருக்கான எழுத்துத் தோ்வு காட்பாடியிலுள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை எழுத ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து 5,033 ஆண்கள், 982 பெண்கள் என மொத்தம் 6,015 போ் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், இத்தோ்வை 5,860 ஆண்கள், 694 பெண்கள் என மொத்தம் 4,554 போ் மட்டுமே எழுதினா். 1,461 போ் தோ்வுக்கு வரவில்லை.

இத்தோ்வை வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) என்.காமினி, மாவட்டக் காவல் கண்காணிப் பாளா் பிரவேஷ்குமாா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

திங்கள்கிழமை நடைபெறும் காவல் துறையில் பணிபுரிபவா்களுக்கான எழுத்துத் தோ்வை 447 போ் எழுத உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com