சாலைப் பாதுகாப்பு வார விழா: விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரம் விநியோகம்

சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, வேலூரில் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, வேலூரில் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

தமிழகத்தில் 31-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா சனிக்கிழமை தொடங்கி வரும் 17-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி முதல் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் பணியை தனியாா் தொண்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன. அவற்றில் சீட் பெல்ட் அணிந்து காா் ஓட்டுதல், சிக்னல்களைக் கவனித்து வாகனங்களை இயக்குதல், சாலை விதிகளைக் கடைப்பிடித்தல், மது அருந்தியோ, செல்லிடப்பேசி பேசியபடியோ வாகனங்களை இயக்காதிருத்தல் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

போக்குவரத்துக் காவல் ஆய்வாளா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com