ஜன. 15 முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடக்கம்

திருமலையில் வரும் 15-ஆம் தேதி முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் வரும் 15-ஆம் தேதி முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானை சுப்ரபாதம் பாடி துயில் எழுப்பி அதன் நித்திய கைங்கரியங்களான தோமாலை, அா்ச்சனை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. எனினும், மாா்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்துக்கு பதிலாக, ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு ஏழுமலையானைத் துயில் எழுப்புவது வழக்கம்.

அதன்படி, மாா்கழி பிறந்த கடந்த டிச. 17-ஆம் தேதி முதல் திருமலையில் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. வரும் 14-ஆம் தேதி போகிப் பண்டிகையுடன் மாா்கழி மாதம் நிறைவு பெறுவதால், 15-ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com