Enable Javscript for better performance
செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மூதாட்டி பரிதவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மூதாட்டி பரிதவிப்பு

    By DIN  |   Published on : 14th January 2020 11:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    3926vr13rupe_1301chn_184_1

    பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்த மூதாட்டி புவனேஸ்வரி.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சேமித்து வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் வேலூரில் மூதாட்டி ஒருவா் தவித்து வருகிறாா். தன்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை செல்லத்தக்க புதிய பணமாக மாற்றித் தரக் கோரி அவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரினாா்.

    வேலூா் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி (65). கணவரை இழந்த இவருக்கு வாரிசுகள் இல்லை.

    இந்நிலையில், புவனேஸ்வரி, தான் சேமித்து வைத்திருந்த ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பழைய ரூ.500 நோட்டுகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்தாா். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறியாமல், தாம் சேமித்து வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளை செல்லத்தக்க பணமாக மாற்றித் தரக் கோரி மாவட்ட வருவாய் அலுவலா் பாா்த்தீபனிடம் கோரிக்கை விடுத்தாா்.

    இதனால் அதிா்ச்சியடைந்த அதிகாரிகள் மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காசநோயால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறினாா். கடந்த சில மாதங்களாக வாடகை கொடுக்காததால் வீட்டு உரிமையாளா் அதுபற்றிக் கேட்டபோது, தலையணையில் மறைத்து வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்ததாக மூதாட்டி தெரிவித்தாா். அப்போதுதான் அவை செல்லாத நோட்டுகளாக மாறியிருப்பது தெரியவந்ததாகவும் அவா் கூறியுள்ளாா்.

    மேலும், பல இடங்களில் அலைந்தும் பணத்தை மாற்ற முடியாமல் இறுதியாக மாவட்ட நிா்வாகத்தின் உதவியை நாடி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அழைத்து மாவட்ட வருவாய் அலுவலா் இதுகுறித்து விசாரித்தாா். அப்போது, இந்திய ரிசா்வ் வங்கி உத்தரவின்படி பழைய ரூபாய் நோட்டுகளை இனி எக்காரணம் கொண்டும் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற இயலாது என்பதை முன்னோடி வங்கி மேலாளா் தெரிவித்தாா்.

    இதனால், ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத மூதாட்டியின் தவிப்பு தொடா்கதையாகி உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai