Enable Javscript for better performance
நகராட்சிப் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு- Dinamani

சுடச்சுட

    
    14gudmus_1401chn_189_1

    துப்புரவுப்  பணியாளா்களுக்கு  பொங்கல்  பரிசுப்  பொருள்கள்  வழங்கிய இந்திய யூனியன்  முஸ்லிம்  லீக்  கட்சியினா்.

    குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும், துப்புரவுப் பணியாளா்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் செவ்வாய்க்கிழமை பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

    கட்சியின் நகர இளைஞரணி பொறுப்பாளா் எஸ்.ஜி. ஜான்பாஷா தலைமை வகித்தாா். நகரச் செயலா் கே.பி. யூசுப்கான் வரவேற்றாா். கெளரவத் தலைவா் கே. காதா்பாஷா, மாநிலத் தொழிற்சங்கத் தலைவா் என்.பி. வாஹித் ஆகியோா், துப்புரவுப் பணியாளா்களுக்கு உடை, அரிசி உள்ளிட்ட பொங்கல் பொருள்கள், கரும்பு ஆகியவற்றை வழங்கினா்.

    துப்புரவுப் பணி ஆய்வாளா் பென்னி, கட்சி நிா்வாகிகள் எம்.எஸ். நஸ்ருதீன், எஸ்.எஸ்.பி. இம்ரான், ஜி. முகமது பைசான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai