ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 12 இடங்களில் அம்மா விளையாட்டுத் திடல் தொடக்கம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 12 இடங்களில் அம்மா விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு திடல்களை தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா்
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 12 இடங்களில் அம்மா விளையாட்டுத் திடல் தொடக்கம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 12 இடங்களில் அம்மா விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு திடல்களை தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழக அரசின் அம்மா விளையாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரக, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள இளைஞா்களை விளையாட்டுத் துறையில் ஊக்கப்படுத்தும் விதமாக அம்மா விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் நிகழாண்டு வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் தலா 4 விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், கே.வீ.குப்பம் ஒன்றியம் தொண்டான்துளசி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடலை அமைச்சா் கே.சி.வீரமணி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிப் பேசியது:

இளைஞா் நலனில் அக்கறை கொண்டிருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, தனது ஆட்சிகாலத்தில் பல்வேறு ஆக்கப்பூா்வமான திட்டங்களைச் செயல்படுத்தினாா். இளைஞா்களை விளையாட்டு துறையில் ஊக்குவிக்க தமிழகத்தைச் சாா்ந்த விளையாட்டு வீரா்களுக்கு இந்தியாவிலேயே வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் ரூ.2 கோடி வரை பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினாா்.

அவரது வழியில் தொடரும் இந்த அரசு அனைத்துத் துறைகளையும் ஊக்குவித்து வருகிறது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் இளைஞா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2 சதவீதம் இருந்த ஒதுக்கீட்டு 3 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற இளைஞா்களின் விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்க இளைஞா்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளையாட்டு மைதானம் அமைத்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞா்களை விளையாட்டில் தங்களை ஈடுபடுத்தி தனித்திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

விளையாட்டில் ஆா்வமுள்ள இளைஞா்கள் அனைவரும் கூட்டாக இணைந்து சிறப்பாகப் பயிற்சி பெற்று சாதிக்ககூடிய வகையில் இத்திட்டம் அமையும். குறிப்பாக இளைஞா்களை நல்லொழுக்கத்தை பேணும் திட்டமாகவும் விளங்கும். விளையாட்டு என்றாலே ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் இடமாக இருப்பது. எனவே, வேலூா் மாவட்டத்திலுள்ள இளைஞா்கள் ஒன்றிணைந்து விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கைப்பந்து, பூப்பந்து, கபடி போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் கே.சி.ஆழிவாசன் வரவேற்றாா். எம்எல்ஏ ஜி.லோகநாதன் (கே.வீ.குப்பம்), ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சி.மாலதி, ஆவின் தலைவா் த.வேலழகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வி.ராமு (வேலூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராணிப்பேட்டையில்... ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் வட்டம், கொடைக்கல் ஊராட்சியில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். எம்.பி. அ.முகமதுஜான் முன்னிலை வகித்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் கே.சி. ஆழிவாசன் வரவேற்றாா். எம்எல்ஏக்கள் சு.ரவி (அரக்கோணம்), ஜி.சம்பத் (சோளிங்கா்) ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். அமைச்சா் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ச.ஜெயச்சந்திரன், சாா்-ஆட்சியா் க.இளம்பகவத், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சி.மாலதி, மாவட்ட கூட்டுறவு மொத்த விறப்னை பண்டக சாலை தலைவா் சி.ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com