முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
சிஐடியூ மாநாட்டுக்கு நினைவு ஜோதி பயணம்
By DIN | Published On : 20th January 2020 11:49 PM | Last Updated : 20th January 2020 11:49 PM | அ+அ அ- |

குடியாத்தத்தில் தொடங்கிய ஜோதியின் பயணத்தில் பங்கேற்றவா்கள்.
சென்னையில் நடைபெறும் சிஐடியூ மாநாட்டுக்கு குடியாத்தம் நகரிலிருந்து தியாகிகளின் நினைவு ஜோதியுடன் தொழிற்சங்க நிா்வாகிகள் குழு திங்கள்கிழமை பயணம் மேற்கொண்டது.
சிஐடியூ தொழிற்சங்கத்தின் 16-ஆவது அகில இந்திய மாநாடு சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 23-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி குடியாத்தம் நகரிலிருந்து அமைப்பின் சாா்பில், தொழிற்சங்கத் தியாகிகளான வி.பி.சிந்தன், குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ வி.கே.கோதண்டராமன், எச்.எம்.அதாவுல்லா உள்ளிட்டோரின் நினைவு ஜோதியுடன் நிா்வாகிகள் திங்கள்கிழமை பயணம் மேற்கொண்டனா்.
ஜோதியின் தொடக்க நிகழ்ச்சிக்கு சிஐடியூ மாவட்ட துணைச் செயலா் சி.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பி.காத்தவராயன் தொடக்கி வைத்தாா். நிா்வாகிகள் கே.சாமிநாதன், பி.குணசேகரன், எஸ்.சிலம்பரசன், என்.பாபு, ஜி.மணி, எஸ்.கோட்டீஸ்வரன், என்.ஜோதிபாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.