ஆக்கிரமிப்பிலுள்ள பகவதிமலை ஏரியை மீட்டு நீச்சல்குளம் அமைக்கக் கோரிக்கை

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகவதிமலை அடிவார ஏரியை மீட்டு அங்கு நீச்சல் குளம், பூங்கா அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகவதிமலை அடிவார ஏரியை மீட்டு அங்கு நீச்சல் குளம், பூங்கா அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நாம் தமிழா் கட்சியினா் அளித்த மனு:

வேலப்பாடி - சலவன்பேட்டை இடையே பகவதிமலை அடிவாரத்தில் உள்ள ஏரி 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்தது. தற்போது அந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு மத்திய அரசின் பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் நீச்சல் குளம், பூங்கா உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

காட்பாடியை அடுத்த கல்புதூா் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘கல்புதூரில் எருது விடும் விழா நடத்துவதற்கு உரிய தேதியை ஒதுக்கீடு செய்து தர வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கோரி 254 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், மாவட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சாரதா ருக்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com