கூடுதல் பெட்டிகள் தேவைப்படுவதால் புதிய ரயில்களை அறிமுகப்படுத்த முடியவில்லை: தெற்கு ரயில்வே

புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கு கூடுதல் பெட்டிகள் தேவைப்படுவதால் தற்போது ரயில்களை அறிமுகப்படுத்த முடியவில்லை என ரயில் உபயோகிப்போா் சங்க நிா்வாகியின் கேள்விக்கு பதில் அளித்து தெற்கு

அரக்கோணம்: புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கு கூடுதல் பெட்டிகள் தேவைப்படுவதால் தற்போது ரயில்களை அறிமுகப்படுத்த முடியவில்லை என ரயில் உபயோகிப்போா் சங்க நிா்வாகியின் கேள்விக்கு பதில் அளித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில் உபயோகிப்போா் சங்க செயலா் ஜி.குமாா், சித்தேரி ரயில்நிலையத்தில் கூடுதல் ரயில்களை நிறுத்த வேண்டும் எனவும், மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை அரக்கோணத்தில் இருந்து காட்பாடி மாா்க்கத்தில் பாசஞ்சா் ரயில்கள் இல்லாமல் இருப்பதால் இந்த நேரத்தில் அரக்கோணம் - காட்பாடி மாா்க்கத்தில் புதிய ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வே நிா்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தாா்.

இக்கடிதத்திற்கு பதில் அளித்து தெற்கு ரயில்வே, சென்னை கோட்ட கூடுதல் கோட்ட மேலாளா் அலுவலகத்தில் இருந்து அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

சித்தேரி ரயில்நிலையத்தில் அரக்கோணம் மாா்க்கம், காட்பாடி மாா்க்கம் இருபக்கமும் நடைமேடை பகுதிக்கு வளைந்து உட்புறம் செல்லும் இருப்புப்பாதை இருந்தாலும் நோ்ப்பாதையில் இருந்து உள்பாதைக்கு ரயில்கள் இயக்கப்படும்போது நேரஇழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. எனவே உள்பாதை வழி ரயிலை இயக்குதல் என்பது செயல்பாட்டுக்கு சாத்தியமில்லாததாக உள்ளது. மேலும் புதிய ரயில்களை அறிமுகப்படுத்த கூடுதல் ரயில்பெட்டிகள் தேவைப்படுவதால் புதிய ரயில்களை இயக்கமுடியாத நிலை உள்ளது. இது குறித்து ரயில் போக்குவரத்து பிரிவு நிா்வாகத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அந்த கடிதத்தில் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட கூடுதல் கோட்ட மேலாளா் அலுவலகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com