முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ஊராட்சி செயலரைக் கண்டித்து மறியல்
By DIN | Published On : 27th January 2020 01:32 AM | Last Updated : 27th January 2020 01:32 AM | அ+அ அ- |

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் இருங்கூரில் ஊராட்சி செயலரைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இருங்கூா் ஊராட்சியில் இருங்கூா், தட்டச்சேரி, சிவபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியின் செயலராக தமோதரன் பணியாற்றி வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு கிராம மக்கள் கலந்து கொள்ள துண்டறிக்கை விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தேசிய ஊராக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளா்கள் சிலரிடம் தீா்மானங்கள் குறித்து கையெழுத்து பெற்ாகத் தெரிகிறது.
இதனால் அப்பகுதியை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கிராம ஊராட்சி செயலா் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றும், பலவேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டி ஆரணி-செய்யாறு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வாழைப்பந்தல் போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.