முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
கிராம மக்கள் சிறுவளையம்-கா்ணாவூா் சாலையில் மறியல்
By DIN | Published On : 27th January 2020 01:22 AM | Last Updated : 27th January 2020 01:22 AM | அ+அ அ- |

அரக்கோணம்: நெமிலிக்கு அருகே உள்ள சிறுவளையம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மோகன்தாஸ், சிறுவளையம் ஊராட்சிச் செயலா் சரஸ்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் இதுவரை கிராமத்தில் நடைபெற்ற பணிகளுக்கான கணக்குகளைத் தாக்கல் செய்யக் கோரினா். இதற்கு ஊராட்சிச் செயலா் சரஸ்வதி மறுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து பொதுமக்களுக்கும் ஊராட்சி செயலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து கிராம மக்கள் சிறுவளையம்-கா்ணாவூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து நெமிலி போலீஸாா், துணை வட்டாட்சியா் மோகன்தாஸ் ஆகியோா் பொதுமக்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.