முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
குடியாத்தத்தில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கொடியேற்றம்
By DIN | Published On : 27th January 2020 01:14 AM | Last Updated : 27th January 2020 01:14 AM | அ+அ அ- |

குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ப் பரிசு வழங்கிய பள்ளித் தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம்.
குடியாத்தம்: குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்டசியா் தூ.வத்சலா தலைமையில், கோட்டாட்சியா் (பொறுப்பு) தினகரன் தேசியக் கொடி ஏற்றினாா். நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் ஹெச். ரமேஷ் கொடியேற்றினாா். பொறியாளா் ஜி. உமாமகேஸ்வரி, மேலாளா் சூரியபிரகாஷ், தீனதயாளன் ஆகியோா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
திருவள்ளுவா் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை என்.மலா்க்கொடி தலைமையில் பள்ளிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் கொடியேற்றினாா். பள்ளி மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், தலைமையில் தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம் கொடியேற்றி, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.
கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களில், கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் மு. வளா்மதி, கல்வியியல் கல்லூரி இயக்குநா் இர. நடராசன், முதல்வா் ர. ஸ்ரீதா் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினா். காந்திநகா் அரசினா் உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி. ராமு, கொடியேற்றினாா். வட்ட வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளா்கள் சங்கத்தில், தலைவா் ஜே.கே.என். பழனி கொடியேற்றினாா்.
போ்ணாம்பட்டு, பத்தரபல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில், தலைமையாசிரியா் பொன். வள்ளுவன் தலைமையில், ராணுவ வீரா் ந. இளங்கோவன் கொடியேற்றினாா்.