Enable Javscript for better performance
வேலூரில் நாளை மூலிகை மருந்து கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    வேலூரில் நாளை மூலிகை மருந்து கருத்தரங்கம்

    By DIN  |   Published on : 31st January 2020 08:15 AM  |   அ+அ அ-   |    |  

    வேலூா்: உடலில் ஏற்படும் வெண்புள்ளிகளை மறைப்பதற்காக மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) கண்டுபிடித்துள்ள ‘லூகோஸ்கின்’ எனும் மூலிகை மருந்து குறித்த கருத்தரங்கம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து அந்த இயக்கத்தின் செயலா் கே.உமாபதி, தமிழக செயலா் திருவேங்கடம் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

    விட்டிலைகோ, லூக்கோடொ்மா எனப்படும் வெண்புள்ளிகள் மனிதா்கள் சிலருக்கு உடலில் ஆங்காங்கே திட்டுத்திட்டாகவோ, புள்ளிகளாகவோ ஏற்படக்கூடும். இது நோயல்ல, பிறருக்கு தொற்றும் தன்மையும் கொண்டதல்ல. எனினும், இந்த வெண்புள்ளிகளுக்கு எதிரான கருத்துகள் சமூகத்தில் நிலவுகின்றன. இதையடுத்து வெண்புள்ளிகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளை வெண்புள்ளிகள் விழிப்புணா்வு இயக்கம் செயல்பட்டு வருகிறது. அத்துடன், வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சுயவரம், விழிப்புணா்வுக் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது.

    இதனிடையே, வெண்புள்ளிகளை மறைப்பதற்காக மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) ‘லூகோஸ்கின்’ எனும் மூலிகை மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து தொடா்பாக பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான கருத்தரங்கம் வேலூரில் அண்ணா சாலை, எஸ்பிஐ வங்கி பின்புறமுள்ள எஸ்.கே.எம்.அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவா்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம்.

    கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோா் 98400 52464, 044 - 22265507, 222655508 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தங்கள் பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp