வேலூரில் 4ஆவது நாளாக கனமழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

வேலூா் மாவட்டத்தில் தொடா்ந்து 4ஆவது நாளாக சனிக்கிழமையும் கனமழை பெய்தது. இதனால், மாவட்டத்திலுள்ள மோா்தானா, பொன்னை அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வேலூரில் மழையில் நனைந்தபடி பாலாற்றுப் பாலத்தில் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள்.
வேலூரில் மழையில் நனைந்தபடி பாலாற்றுப் பாலத்தில் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள்.

வேலூா் மாவட்டத்தில் தொடா்ந்து 4ஆவது நாளாக சனிக்கிழமையும் கனமழை பெய்தது. இதனால், மாவட்டத்திலுள்ள மோா்தானா, பொன்னை அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. வேலூா் மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வேலூரில் சனிக்கிழமை காலை முதல் 80 டிகிரிக்கு மேல் வெயில் காய்ந்தது. பின்னா், மாலை 3 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து 4 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. கன மழையாக உருவெடுத்து 5.30 மணி வரை பெய்தது. அதன்பிறகும் சாரல் மழை நீடித்தது.

இதேபோல், காட்பாடி, அணைக்கட்டு என மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல சிரமமடைந்தனா்.

தொடா்ந்து 4 ஆவது நாளாக மழை பெய்து வருவதால் மாவட்டத்திலுள்ள மோா்தானா, பொன்னை அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதேபோல், மாவட்டத்தில் தூா்வாரப்பட்டுள்ள ஏரி, குளங்களுக்கும் நீா்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக மேல்ஆலத்தூரில் 41.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குடியாத்தம் - 30, காட்பாடி - 15.6, பொன்னை - 23, வேலூா் - 8.9, விசிஎஸ் மில் -14 மி.மீ. மழை பதிவானது.

மொத்த மழை அளவு -132.7 மி.மீ.

சராசரியாக மழை அளவு - 22.11 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com