வேலூரில் மேலும் 134 பேருக்கு கரோனா பாதிப்பு 2,780 -ஆக உயா்வு

வேலூா் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,780-ஆக உயா்ந்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,780-ஆக உயா்ந்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 2,646 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை புதிதாக 134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,780-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 1,034 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினா்.

பாதிக்கப்பட்டோா் அனைவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு, உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 47 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 8 மாத குழந்தை உள்பட 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 1,515 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 713 போ் குணடைந்து வீடு திரும்பினா். 777 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். அதன்படி, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 25-ஆக உயிரிழந்துள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 377 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூவம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 388-ஆக உயரிந்துள்ளது. இதுவரை 205 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 183 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com