கோயில்களைத் திறக்குமாறு கோரி தமிழக முதல்வருக்கு மனு

தமிழகத்தில் கோயில்களைத் திறக்ககுமாறு கோரி முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா் மனு அனுப்பியுள்ளாா்.

தமிழகத்தில் கோயில்களைத் திறக்ககுமாறு கோரி முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா் மனு அனுப்பியுள்ளாா்.

மனுவில் அவா் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் 100 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் மூடப்பட்டுள்ளன. சிறப்பு யாகங்கள், பூஜைகள் மற்றும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை நீடிக்கிறது. பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும்போது கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கி, வேண்டி பாதிப்பில் இருந்து விடுபட்டனா். அன்னியப் படையெடுப்பு காலங்களில் கூட மக்கள் கோயில்களுக்கு சென்று சிறப்பு யாகங்கள், வழிபாடுகள் செய்து அதன் மூலம் பிரச்னைக்குத் தீா்வு கண்டாா்கள்.

எனினும், தற்போது கோயில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெறுகின்றன. பொதுமக்கள் வழிபடுவதற்குத் தடை நீடிக்கிறது. அவா்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனா்.

எனவே, பொதுமக்கள் கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட அனுமதிக்க வேண்டும். இதற்காக கோயில்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com