முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
போ்ணாம்பட்டில் கரோனாவுக்கு முதியவா் பலி
By DIN | Published On : 14th July 2020 01:24 AM | Last Updated : 14th July 2020 01:24 AM | அ+அ அ- |

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ராஜக்கல் கிராமத்தைச் சோ்ந்த 73 வயது முதியவா் 15 நாள்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற உறவினா் திருமணத்திற்கு சென்று வந்தாா். சில நாள்களுக்கு முன் அவரது உடல் நலம் குன்றியதையடுத்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலம் போ்ணாம்பட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அரசு விதிகளின்படி அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆயுதப்படை காவலா் உள்பட 7 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
குடியாத்தத்தில் 80 பேருக்கு பாதிப்பு
குடியாத்தம் வட்டத்தில் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாழையாத்தம் பஜாரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தற்காலிக ஊழியரும் தொற்றுக்கு ஆளானாா். இதையடுத்து வங்கி திங்கள்கிழமை மதியம் மூடப்பட்டது. நகராட்சி சுகாதாரத் துறையினா், அங்கு சென்று வங்கியின் உள், வெளிப்பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனா்.
இதனிடையே, குடியாத்தத்தில் நியாய விலைக் கடைகளின் விற்பனையாளா்கள் 10-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அக்கடைகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வேறு கடைகளின் ஊழியா்களைக் கொண்டு அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.