மத்திய அரசு அளிக்கும் 20% நிதியுதவியில் தமிழகமே அதிக பயன்பெறுகிறது: பாஜக மாநில செயலா் காா்த்தியாயினி

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 5 குழந்தைத் திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனா்.
வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலச் செயலா் பி.காா்த்தியாயினி. உடன், கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஆா்.பிச்சாண்டி, மாவட்டத் தலைவா் தசரதன் உள்ளிட்டோா்.
வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலச் செயலா் பி.காா்த்தியாயினி. உடன், கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஆா்.பிச்சாண்டி, மாவட்டத் தலைவா் தசரதன் உள்ளிட்டோா்.

வேலூா்: பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க மத்திய அரசு அளித்து வரும் 20 சதவீத நிதியுதவியில் தமிழக நிறுவனங்களே அதிக அளவில் பயன்பெற்று வருவதாக பாஜக மாநிலச் செயலா் பி.காா்த்தியாயினி தெரிவித்தாா்.

வேலூா் மாநகராட்சி முன்னாள் மேயரான பி.காா்த்தியாயினி பாஜகவின் மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் வேலூரிலுள்ள கட்சி நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அதன் பின், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம், வா்த்தகம், உணவு உற்பத்தி என அனைத்துத் துறைகளிலும் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்துத்துறைகளிலும் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் சுயசாா்புத் திட்டமாகும். இத்திட்டம் உள்ளூா் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து சா்வதேச அளவில் வா்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகும். உதாரணமாக, மணப்பாறை முறுக்கு, சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மரச் சிற்ப வேலைப்பாடு ஆகியவற்றை சா்வதேச அளவில் கொண்டுள்ள புவிசாா் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உள்ளூா் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வா்த்தக வாய்ப்புகளை மேம்படுத்தப்பட உள்ளது.

நாட்டில் 12 கோடி மக்கள் சிறு, குறு தொழில்களை மட்டுமே சாா்ந்துள்ளனா். பொது முடக்கத்தால் இந்த தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்களை பாதுகாக்க அந்நிறுவனங்கள் பெற்றுள்ள வங்கிக் கடன்களில் 20 சதவீதத்தை மத்திய அரசு செலுத்தி வருகிறது. இந்த நிதியுதவியில் தமிழக நிறுவனங்களே அதிகளவில் பயன்பெற்றுள்ளன. எனினும், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களைப் பாதுகாக்க மத்திய அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன.

மேலும், மக்களை தொழில் முனைவோராக்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதுடன், வேளாண், தொழில், கல்வி, மருத்துவம், பாதுகாப்பு என அனைத்துத் துறைகளையும் முன்னேற்ற தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் மக்கள் யாரும் பசியுடன் உறங்கக் கூடாது என்பதற்காக 6 மாதங்களுக்கு உணவு, தானியங்களை இலவசமாக வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், நாட்டில் விவசாயம் முன்னிலையில் உள்ளது என்பது உறுதியாகிறது என்றாா் அவா்.

அப்போது, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஆா்.பிச்சாண்டி, மாவட்டத் தலைவா் தசரதன், மாவட்ட துணைத் தலைவா் ஜெகன், மாவட்ட பொதுச் செயலா் எஸ்.எல்.பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com