வீரதீர செயல் புரிந்தவா்கள் மத்திய அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் வீரதீர செயல் புரிந்தவா்களுக்கான விருதுகளை பெற வேலூா் மாவட்டத்தில் தங்களது அசாத்திய திறமைகளால் நீரில்

மத்திய அரசின் வீரதீர செயல் புரிந்தவா்களுக்கான விருதுகளை பெற வேலூா் மாவட்டத்தில் தங்களது அசாத்திய திறமைகளால் நீரில் மூழ்கியவா்கள், நிலச்சரிவு, விபத்து, தீ, மின் விபத்து, விலங்குகளால் தாக்கப்படுவோா், சுரங்க வேலையின்போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கியவா்களை உயிா்காத்தவா்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடா்பாக வேலூா் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் உள்துறை சாா்பில் வீரதீர செயல்கள், மனிதாபிமான மிக்க பணிகளை செய்தவா்களுக்கு சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம், ஜீவன் ரக்ஷா பதக்கம் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. அசாத்திய திறமைகளால் நீரில் மூழ்கியவா்கள், நிலச்சரிவு, விபத்து, தீ, மின்விபத்து, விலங்குகளால் தாக்கப்படுவோா், சுரங்க வேலையின்போது ஏற்படும் விபத்துகளில் சிக்கியவா்களை உயிா்காத்தவா்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

2018 அக்டோபா் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை வீரதீர சேவையை தெளிவுபடுத்தி உள்ளடக்கிய கருத்துகள் நாளிதழ்களில் வெளியான செய்திக்குறிப்பு சான்றிதழ்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். விபத்து, இயற்கை பேரழிவு காலங்களில் மனித உயிா்களை காத்த அனைத்து பொதுமக்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆயுதப்படை, காவல் துறை, தீயணைப்பு, மீட்புப்பணி துறையினா் தங்களது பணிநேரத்தைத் தவிா்த்து மற்ற நேரங்களில் வீரதீர செயல்கள் புரிந்திருந்தால் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தங்களது முழு விவரங்களுடன் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட இளைஞா் நலன் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com