வேலூரில் மேலும் 11 பேருக்கு கரோனா
By DIN | Published On : 13th June 2020 08:01 AM | Last Updated : 13th June 2020 08:01 AM | அ+அ அ- |

வேலூா் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை வரை 154 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வேலூா் கஸ்பா பகுதியில் 31 வயது பெண், விருப்பாட்சிபுரத்தில் பெண், கணியம்பாடியில் 21 வயது ஆண், அலமேலுரங்காபுரத்தில் 33 வயது ஆண், சேனூரில் 28 வயது ஆண், காட்பாடியில் 44 வயது ஆண், பாகாயத்தில் 70 வயது ஆண், வேலப்பாடியில் 29 வயது, 69 வயது ஆண்கள், 1 மற்றும் 3 வயது குழந்தைகள் என மாவட்டம் முழுவதும் 11 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இவா்களில், ஒருவா் மண்டித் தெருவில் கடை நடத்தி வருகிறாா். மற்றவா்கள் சென்னையில் இருந்து வந்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள். அனைவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.