வேலூர்: கரோனாவில் இருந்து மீண்ட பாதிரியார் பிளாஸ்மா நன்கொடை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பாதிரியார் தனது உடலிலுள்ள ஆக்விட் கோவிட் - 19 பிளாஸ்மாக்கள் தானமாக அளித்துள்ளார். 
பிளாஸ்மா சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ரத்த தானம் பாதிரியார் இம்மானுவேல் ஞான சீயோன்.
பிளாஸ்மா சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ரத்த தானம் பாதிரியார் இம்மானுவேல் ஞான சீயோன்.

வேலூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பாதிரியார் தனது உடலிலுள்ள ஆக்விட் கோவிட் - 19 பிளாஸ்மாக்கள் தானமாக அளித்துள்ளார். 

கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளை குணப்படுத்திட வேலூர் மாவட்டத்தில் இருந்து முதன்முதலாக இவர் தனது பிளாஸ்மா செல்களை நன்கொடை அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த பிளாஸ்மா என்பது ஒரு மஞ்சள் நிற திரவமாகும். முழு ரத்தத்தின் பாதி அளவு உள்ள இந்த பிளாஸ்மா அணுக்கள். வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த ஒருவருவது ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா, அந்நோய் தொற்றை எதிர்த்து போராடும் ஆற்றலை பெற்றுள்ளன. இதன்படி, கோவிட் -19 நோய் தொற்றில் இருந்து மீண்டவரின் உடலிலுள்ள ரத்ததில் அந்நோய் தொற்றை எதிர்த்து போராடக்கூடிய ஆக்டிவ் கோவிட் -19 பிளாஸ்மா நிறைந்து காணப்படும். அந்த ஆக்டிவ் பிளாஸ்மாவை பெற்று அதே நோய் தொற்றால் பாதிக்கப்படும் பிறரது ரத்தத்தில் செலுத்துவதன் மூலம் அவர்களது உடலிலும் அந்நோய் தொற்றை எதிர்த்து போராடும் ஆற்றல் ஏற்படும். தற்போது நாட்டில் கரோனா தொற்றாளர்களை குணப்படுத்த இந்த வகை பிளாஸ்மா சிகிச்சையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், வேலூர் காட்பாடி பார்னீஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் இம்மானுவேல் ஞான சீயோன்(49), கடந்த மார்ச் மாதம் மாவட்டத்தில் முதன்முதலாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கரோனா நோயாளிகளை குணப்படுத்திட தனது உடலில் உள்ள ஆக்டிவ் கோவிட் -19 பிளாஸ்மாக்களை அவர் தானம் அளித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நீண்ட நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்ததாகும், இந்த அனுபவத்தின் விளைவாக கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பிற நோயாளிகளை விரைவில் குணமாக்கிட தனது உடலிலுள்ள ஆக்டிவிட் கோவிட் 19 பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்திருப்பதாக கூறியுள்ள பாதிரியார், தேவைப்பட்டால் அடுத்த 15 நாள்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக பிளாஸ்மா தானம் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் இதேபோல் தங்களது உடலிலுள்ள ஆக்டிவ் கோவிட் 19 பிளாஸ்மாக்களை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று சிஎம்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
நாட்டில் தற்போது அஃபெரெசிஸ் உரிமம் பெற்று ஐ.சி.எம்.ஆர். மல்டிசென்டர் சோதனையில் பதிவு செய்யப்பட்ட ரத்த மையங்கள் மட்டுமே ரத்தத்தில் இருந்து ஆக்டிவ் கோவிட் -19 பிளாஸ்மாக்களை பிரித்தெடுத்து சேகரிக்க முடியும். வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இந்த பிளாஸ்மா சோதனைக்கான அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com