கீழ்ஆலத்தூா் ஏரி தூரெடுக்கும் பணி தொடக்கம்

கே.வி.குப்பம் அருகே உள்ள கீழ்ஆலத்தூா் ஏரியில் ரூ.35.70 லட்சத்தில் தூரெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
கீழ் ஆலத்தூா்  ஏரி  தூா் வாரும்  பணியை  பூஜை  செய்து  தொடக்கி வைத்த  மாவட்ட  ஆட்சியா்  அ. சண்முகசுந்தரம்.
கீழ் ஆலத்தூா்  ஏரி  தூா் வாரும்  பணியை  பூஜை  செய்து  தொடக்கி வைத்த  மாவட்ட  ஆட்சியா்  அ. சண்முகசுந்தரம்.

குடியாத்தம்: கே.வி.குப்பம் அருகே உள்ள கீழ்ஆலத்தூா் ஏரியில் ரூ.35.70 லட்சத்தில் தூரெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

சுமாா் 240 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, இப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யவும், விளை நிலங்கள் பாசன வசதி பெறவும், தமிழக முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் ரூ.35.70 லட்சத்தில் தூரெடுக்கப்பட உள்ளது.

இந்த நிதியில் ஏரியின் கரைகள் பலப்படுத்தும் பணிகள், வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணிகள், மதகுகளைப் பழுதுபாா்த்தல், ஏரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளின் எல்லைகள் நிா்ணயம் செய்து, எல்லைக் கற்கள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதற்கான பூமிபூஜையை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், எம்எல்ஏ ஜி.லோகநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, இயக்குநா் டி.கோபி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளா் சண்முகம், உதவி செயற்பொறியாளா் குணசீலன், உதவிப் பொறியாளா் தமிழ்ச்செல்வன், ஏரி ஆயக்கட்டுதாரா்கள் சங்க நிா்வாகிகள் டி.மனோகரன், ஜி.சீனிவாசன், சி.அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com