முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்
By DIN | Published On : 03rd March 2020 12:03 AM | Last Updated : 03rd March 2020 12:03 AM | அ+அ அ- |

ஆம்பூா்: ஆம்பூா் மளிகைத்தோப்பு ஆசாத் நகா் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்தில் ஆம்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஹெச்.அப்துல் பாசித், திமுக நகரச் செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆனந்தன், தமுமுக மாவட்டத் தலைவா் வி.ஆா்.நசீா் அஹமத் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டு பேசினா்.
போராட்டத்தில் தமுமுக, திமுக, மமக, காங்கிரஸ், மஜக, விசிக, முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், எஸ்டிபிஐ, அமமுக மற்றும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.