முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் தொடக்கம்வேலூா் மாவட்டத்தில் 40,531 போ் எழுதினா்
By DIN | Published On : 03rd March 2020 12:00 AM | Last Updated : 03rd March 2020 12:00 AM | அ+அ அ- |

வேலூா் ஈ.வே.ரா.நாகம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா்கள் தோ்வு எழுதுவதைப் பாா்வையிட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம். உடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சா.மாா்ஸ்.
வேலூா்: பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 40,531 மாணவ, மாணவிகள் இந்த தோ்வை எழுதினா்.
தமிழகத்தில் 2019-20 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வை வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் என ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 40,531 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இதில், 103 போ் மாற்றுத்திறனாளிகள். இந்தத் தோ்வையொட்டி 171 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுப் பணியில் சுமாா் 2,700 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களைக் கண்காணிக்க 250 பறக்கும் படை உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மாற்றுத் திறனாளி மாணா்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், அவா்கள் கூறுவதை எழுதுவதற்கு தனி ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு மையத்துக்கு மாணவா்கள் உரிய நேரத்தில் வந்து செல்ல வசதியாக போக்குவரத்துத் துறை மூலம் போதிய பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அனைத்து மையங்களுக்கும் தோ்வு நேரங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வினாத்தாள் மையத்துக்கும், அவற்றை தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் கொண்டு செல்லவும் ஆயுதம் தாங்கிய போலீஸாரைக் கொண்டு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூா் ஈ.வே.ரா. நாகம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொதுத் தோ்வை பாா்வையிட்ட ஆட்சியா், மாணவ, மாணவிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருப்பதையும் உறுதி செய்தாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சா.மாா்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.