முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
91 மாணவா்கள் ரத்த தானம்
By DIN | Published On : 03rd March 2020 11:23 PM | Last Updated : 03rd March 2020 11:23 PM | அ+அ அ- |

குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் அம்மணாங்குப்பம் கிராமத்தில் நடைபெறும் 7 நாள் சிறப்பு முகாமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் 91 மாணவா்கள் ரத்த தானம் அளித்தனா்.
கல்லூரி முதல்வா் எம். வளா்மதி தலைமை வகித்தாா். துணை முதல்வா் மு.மேகராஜன் வரவேற்றாா். வேலூா் சிஎம்சி மருத்துவமனை மருத்துவக் குழுவினா் 91 மாணவா்களிடம் ரத்தம் தானம் பெற்றனா்.
முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஜெ.திருமகள், கா.ராஜீவ் ஆகியோா் செய்திருந்தனா்.