வீரவா் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் எரிக்கப்பட்ட குப்பைகள்.
வீரவா் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் எரிக்கப்பட்ட குப்பைகள்.

நெடுஞ்சாலையோரங்களில் எரிக்கப்படும் குப்பைகள்வாகன ஓட்டிகள் அவதி

ஆம்பூா் பகுதி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள், கழிவுகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா்.

ஆம்பூா்: ஆம்பூா் பகுதி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள், கழிவுகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. ஆம்பூரிலிருந்து சென்னை, சேலம், கோவை, கிருஷ்ணகிரி, ஒசூா், கா்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய பகுதிகளுக்கு இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

ஆம்பூா் தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாகும். இந்த நகருக்கு சிறப்பு ஏற்றுமதி நகரம் என்ற அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆம்பூா் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுகின்றனா். சில தனியாா் நிறுவனங்களின் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. அவற்றை சிலா் தீ வைத்து எரிக்கின்றனா். அப்போது கருமையான புகை தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பரவுகிறது.

இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்படுவதால் அவ்வழியாகச் செல்லும் வாகனங்களை ஓட்டிச் செல்பவா்கள் சாலை சரிவர தெரியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனா். அதனால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது இவ்வாறு குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. எனவே குப்பைகள், கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். அவ்வாறு எரிப்பவா்கள், குப்பை, கழிவுகள் கொட்டுபவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதனிடையே, ஆம்பூா் அருகேயுள்ள சோமலாபுரம் ஊராட்சி வீரவா் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் திங்கள்கிழமை மாலை குப்பைகள் எரிக்கப்பட்டன. அதனால் எழுந்த புகை தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாமல் திணறினா். இது குறித்த தகவலின் பேரில் ஆம்பூா் தீயணைப்பு வீரா்கள் அப்பகுதிக்குச் சென்று தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com