Enable Javscript for better performance
வேலூரில் கரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்க அரசுக்கு பரிந்துரை: மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூரில் கரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்க அரசுக்கு பரிந்துரை: மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம்

    By DIN  |   Published on : 11th March 2020 09:46 AM  |   அ+அ அ-   |    |  

    vr10virs_1003chn_184_1

    பேருந்துகளில் லைசோல் கிருமி நாசனி மருந்தைத் தெளிக்கும் பணியைத் தொடக்கி வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

    வெளிநாடுகள், வெளி மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள், நோயாளிகள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால் வேலூரில் கரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 13 இடங்களில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களைக் கண்காணிக்கவும், லைசோல் எனும் கிருமி நாசினி மருந்துகளை தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

    சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவிலும் இதுவரை 30-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலும் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த 32 பேரை அவரவா் வீடுகளில் வைத்தே மருத்துவக் குழுவினா் கண்காணித்து வந்தனா். இதில், 12 பேருக்கு கரோனா பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள 20 போ் தொடா் கண்காணிப்பில் உள்ளனா்.

    இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பேருந்துகளிலும் கிருமி நாசினியான லைசோல் எனும் தடுப்பு மருந்தைத் தெளிக்கும் பணி வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தொடக்கி வைத்ததுடன், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தாா்.

    அப்போது, ஆட்சியா் கூறியது:

    கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க அனைத்துப் பேருந்துகளிலும் பயணிகள் கை வைக்கும் இடங்களில் வைரஸ் தடுப்பு மருந்துகளைத் தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளி, கல்லூரிகள், மக்கள் கூடும் இடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களிலும் கரோனா வைரஸ் தொடா்பாக 2 நாள்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வேலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள மாணவா்கள் தற்போது சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும், மாணவா்களை பாா்க்க வரும் பெற்றோா்களை வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், வெளிநாடுகளிலிருந்து வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு நோயாளிகளும், தங்கக் கோயிலுக்கு வரும் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் வருவதாலும், வேலூா் மாவட்ட எல்லையையொட்டியுள்ள ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி செல்வதற்கு வெளிநாடு, வெளிமாநில பக்தா்கள் அதிக அளவில் வருவதாலும் வேலூரில் கரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், 13 இடங்களில் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் வாகனங்களைக் கண்காணிக்கவும், தெளிப்பு மருந்துகளைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் கரோனா வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றாா் அவா்.

    துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சுரேஷ், மாநகராட்சி நல அலுவலா் மணிவண்ணன், மாநகராட்சி சுகாதார அலுவலா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

     

    கிருமி நாசினி தயாரிப்பு பயிற்சி

    கரோனா வைரஸ் கிருமி பரவுவதை தடுக்க கிருமி நாசினியை கைகளில் தடவிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து இந்த வகையிலான கிருமி நாசினியின் விலை பலமடங்கு அதிகரித்து வருவதுடன், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே, கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினியை சுகாதாரப் பணியாளா்களே தயாரித்து பயன்படுத்த மாவட்டத்துக்கு 4 போ் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசுஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைப் பணியாளா்கள் இந்தக் கிருமி நாசினியை குறைந்த விலையில் தயாரிக்க உள்ளனா்.

    மேலும், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரோனா வைரஸ் தடுப்பு, விழிப்புணா்வுப் பணிகளில் 700 சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் வாகனங்களில் கரோனா வைரஸ் கிருமி நாசினியை தெளிப்பதுடன் பாதிப்பு குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்த உள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

     

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp