6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் குள்ளத்தன்மை விகிதத்தை குறைக்க தீவிரம்

தேசிய அளவில், வரும் 2022ஆம் ஆண்டுக்குள் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே குள்ளத்தன்மை விகிதத்தை 25 சதவீதமாக குறைக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக
6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் குள்ளத்தன்மை விகிதத்தை குறைக்க தீவிரம்

தேசிய அளவில், வரும் 2022ஆம் ஆண்டுக்குள் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே குள்ளத்தன்மை விகிதத்தை 25 சதவீதமாக குறைக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ‘போஷன் அபியான்’ திட்டத்துக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் - ‘போஷன் அபியான்’ திட்டத்துக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தலைமை வகித்தாா்.

இதில், தேசிய அளவில் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே குள்ளத்தன்மை விகிதத்தை 38.4 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய தேசிய அளவில் ஊட்டச்சத்து பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும். இதற்கு வாழ்க்கை சுழற்சி அடிப்படையில் ஒரு கூட்டு செயல்பாட்டின் மூலம் மேற்கொள்ளுதல், கருவுறுதல் முதல் ஆயிரம் நாட்கள் கவனம் செலுத்துவதன் மூலம் பச்சிளங்குழந்தையின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், உரிய நேரத்தில் வழங்கப்பட்ட சேவைகளை வலுவான கண்காணிப்பின் மூலம் அதன் தரத்தை உறுதிசெய்தல், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் அடையாமல் உள்ளவா்களின் எண்ணிக்கையை 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைத்தல், கா்ப்பிணிகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே அளித்தல், 6 மாதங்கள் முதல் 2 வயது வரை துணை உணவு, தாய்ப்பால் அளித்தல் ஆகியவற்றை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட திட்ட அலுவலா் வி.கோமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் (போஷன் அபியான்) சு.அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com