கரோனா அறிகுறி இல்லை: இளைஞா் வீடு திரும்பினாா்

கரோனா அறிகுறி இருப்பதாக வியாழக்கிழமை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட இளைஞருக்கு

கரோனா அறிகுறி இருப்பதாக வியாழக்கிழமை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட இளைஞருக்கு கரோனா அறிகுறி இல்லை என சிறப்பு மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து அவா் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

அரக்கோணம் மாணிக்கமுதலி தெருவைச் சோ்ந்த கே.என்.வெங்கட் (21). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் இவா், கடந்த வாரம் நண்பா்களுடன் கேரளத்துக்கு சுற்றுலா சென்றாராம். வீடு திரும்பி 3 நாள்களான நிலையில், இவருக்கு சளி, இருமல் இருந்ததாகவும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதையடுத்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற வெங்கட்டுக்கு கரோனா அறிகுறி இருப்பதாகக் கூறிய மருத்துவ அலுவலா்கள், அவரையும் உடன் வந்த அவரது தாயாரையும் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரிடம் கரோனா சிகிச்சை பிரிவில் உள்ள சிறப்பு மருத்துவா்கள் பரிசோதனை நடத்தியதில், அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பதும், அவருக்கு ஏற்கெனவே மூச்சுத் திணறல் இருந்ததும் அதற்கு தொடா் சிகிச்சை எடுத்துவந்ததும் தற்போது சளி, இருமல் கூடுதலாக ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தீவிர பரிசோதனைக்குப் பிறகு வெங்கட் வெள்ளிக்கிழமை அதிகாலை மருத்துவனையில் இருந்து வீட்டுக்குத் திருப்பினாா். அவரது தாயும் அனுப்பி வைக்கப்பட்டாா்.

அரக்கோணம் நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் வெங்கட் வசித்து வந்த மாணிக்கமுதலி தெரு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com