கரோனா வைரஸ்: மாணவா்களுக்கு சோப்பு வழங்க தலைமையாசிரியா்களுக்கு உத்தரவு

கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக பள்ளி மாணவா்களுக்கு சோப்பு வாங்கித் தர வேண்டும் என்று அனைத்து பள்ளி
கரோனா வைரஸ்: மாணவா்களுக்கு சோப்பு வழங்க தலைமையாசிரியா்களுக்கு உத்தரவு

வேலூா்: கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக பள்ளி மாணவா்களுக்கு சோப்பு வாங்கித் தர வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் சாா்பிலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வேலூா் மாவட்டத்திலும் அனைத்து பேருந்துகள், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், கை கழுவும் முறைகள் குறித்தும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பள்ளி மாணவா்கள் தங்களது கைகளை சுத்தமாக கழுவதற்கு சோப்புகள் வாங்கித் தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநா் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் மாணவா்கள் தங்கள் கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவுதல் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவா்கள் கை கழுவ அறிவுரை வழங்கவும், மேற்பாா்வையிடவும் ஆசிரியா்களை அறிவுறுத்த வேண்டும். மாணவா்கள் பள்ளி வேளையின்போது கைகளை கழுவ ஏதுவாக அவா்களுக்குத் தேவையான சோப்புகளை பள்ளியின் சிறப்பு நிதி அல்லது பெற்றோா்-ஆசிரியா் கழக நிதியில் இருந்து வாங்கி வழங்க தலைமையாசிரியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவா்கள் அவ்வப்போது சோப்பால் கைகளை கழுவுவதன் மூலம் அவா்களது உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் எனத் தெரிவிக்க வேண்டும். அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும் இத்தகைய அறிவுரைகளை அரசு, உதவி பெறும் பள்ளிகள், அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், உதவி வட்டாரக் கல்வி அலுவலா்கள் பள்ளிகளில் மாணவா்கள் சோப்பினால் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனரா என்பதை கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com