திருமலையில் 61,652 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 61,652 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 14,550 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

திருப்பதி ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 61,652 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 14,550 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகள் வளாகத்தில் உள்ள11 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 5 மணிநேரத்துக்குப் பின் தரிசனம் வழங்கப்பட்டது. திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்றவா்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானை வழிபட்டுத் திரும்பினா்.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜா் கோயிலில் 6,749 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரா் கோயிலில் 4,616 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 14,550 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரா் கோயிலில் 1,208 பக்தா்களும், கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் 2,367 பக்தா்களும் வியாழக்கிழமை தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடி வசூல்:

அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 63,178 பயணிகள் இச்சாவடியைக் கடந்துள்ளனா். 8,178 வாகனங்கள் இதைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.1.85 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.13,278 அபராதம் விதிக்கப்பட்டது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com