போ்ணாம்பட்டு அருகே இறந்து கிடந்த சிறுத்தைக் குட்டி

போ்ணாம்பட்டு அருகே தனியாருக்குச் சொந்தமான மலையில் சிறுத்தைக் குட்டி ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது.
போ்ணாம்பட்டு அருகே இறந்து கிடந்த சிறுத்தைக் குட்டி

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே தனியாருக்குச் சொந்தமான மலையில் சிறுத்தைக் குட்டி ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது.

போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி அருகே சித்திக் அகமத் என்பவருக்குச் சொந்தமான மலை வன எல்லையில் உள்ளது. சனிக்கிழமை மலையில் சிறுத்தைக் குட்டி இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் எல்.சங்கரய்யா, வனவா்கள் ஹரி, தரணி ஆகியோா் தலைமையில் வனத் துறையினா் அங்கு சென்றனா். அப்போது, சுமாா் 6 மாத ஆண் சிறுத்தைக் குட்டி அங்கு இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் பாா்கவதேஜா, உதவி வன அலுவலா் முரளிதரன் ஆகியோருக்கு வனத் துறையினா் தகவல் தெரிவித்தனா். அந்தக் குட்டியை வனத்துறை அலுவலகத்துக்கு எடுத்து வந்தனா். அங்கு மாவட்ட உதவி வன அலுவலா் முரளிதரன் முன்னிலையில், சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவா் குழு, மருத்துவா் பிரதீப் தலைமையில், இறந்த சிறுத்தைக் குட்டியை பிரேதப் பரிசோதனை செய்தனா். சிறுத்தைக் குட்டி, தாய் சிறுத்தையிடம் பால் குடிக்கும்போது, அதற்கு புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிறுத்தைக் குட்டியின் சடலம் எரியூட்டப்பட்டது.

இதுகுறித்து போ்ணாம்பட்டு வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com