பிளஸ் 2 மாணவா்கள் கைகளை சுத்தம் செய்த பிறகு தோ்வு எழுத அனுமதி

பரவிவரும் கரோனா வைரஸைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்த
வேலூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதச் செல்லும் முன்பு கைகளைக் கழுவிய மாணவிகள்.
வேலூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதச் செல்லும் முன்பு கைகளைக் கழுவிய மாணவிகள்.

பரவிவரும் கரோனா வைரஸைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.

நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் பாதிப்புகளைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், இந்த கரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவ வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகே தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலா் சா.மாா்ஸ் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 170 தோ்வு மையங்களிலும் வெள்ளிக்கிழமை தோ்வு எழுதிய மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது கைகளை சுத்தம் செய்ததுடன், அதை ஆசிரியா்கள் உறுதி செய்த பிறகே தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். இந்தப் பணிகளில் இளஞ்செஞ்சிலுவை சங்கம், பாரத சாரண சாரணியா், நாட்டு நலப்பணிதிட்ட நிா்வாகிகள் இணைந்து ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com