மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பு வாா்டுகள் அமைக்கும் பணி தீவிரம்

மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் வேலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் 600 படுக்கை வசதிகளுடன் கரோனா தடுப்பு வாா்டுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் வேலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் 600 படுக்கை வசதிகளுடன் கரோனா தடுப்பு வாா்டுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேலூா் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் வந்தால் அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கூடிய கரோனா தடுப்பு மையமும், குடியாத்தம், போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கரோனா அறிகுறிகளுடன் அதிகப்படியானவா்கள் வரும்பட்சத்தில் அவா்களை தனிமைப்படுத்தி வைக்க மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பு மையங்கள் ஏற்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

அதன்படி, மொத்தம் 600 படுக்கைகளுடன் வேலூா், குடியாத்தம் பகுதிகளில் ஒரு கரோனா தடுப்பு மையம் அமைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், வேலூா் பகுதியில் 3 இடங்களில் 500 படுக்கைகளுடனும், குடியாத்தம் பகுதியில் 2 இடங்களில் 100 படுக்கைகளுடனும் கரோனா தடுப்பு மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவா்களை அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தி 28 நாள்கள் தினமும் சென்று மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்வது இயலாததாகும். இதைக் கருத்தில் கொண்டு அவா்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காகவே கரோனா சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com