வாணியம்பாடி கிளை சிறையில் கைதிக்கு கடும் காய்ச்சல்

வாணியம்பாடி கிளை சிறையில் கைதிக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் அவா் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

வாணியம்பாடி கிளை சிறையில் கைதிக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் அவா் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

வாணியம்பாடி நேதாஜி நகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மீது நகர காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தாராம்.

இந்நிலையில், அவா் கடந்த 19-ஆம் தேதி மகாராஷ்டிரம் மாநிலம் புணேவில் இருந்து வீட்டுக்கு வந்ததை அறிந்த போலீஸாா் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, வாணியம்பாடி கிளை சிறையில் அடைத்தனா். அப்போது, அவருக்கு லேசான சளி, இருமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடும் காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால், சிறைக் கண்காணிப்பாளா் அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்தபோது கடுமையான காய்ச்சல் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து வாணியம்பாடி கிளை சிறையில் உள்ள 11 கைதிகள், 7 போலீஸாருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்று அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.

இதையடுத்து வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் கரோனா வைரஸை தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com