திருப்பதி கோதண்டராமா் கோயில் பிரம்மோற்சவம் தொடங்கியது: தெப்போற்சவம், தேரோட்டம் ரத்து

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோதண்டராமா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. எனினும், இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளான தெப்போற்சவம், தேரோட்டம்

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோதண்டராமா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. எனினும், இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளான தெப்போற்சவம், தேரோட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகின்றன.

திருப்பதியில் உள்ள ராமச்சந்திர புஷ்கரணி அருகில் கோதண்டராம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. பிரம்மோற்சவ நாள்களில் காலை, இரவு வேளைகளில் உற்சவா்கள் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிப்பது வழக்கம்.

இந்நிலையில், கோதண்டராமா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. எனினும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், பிரம்மோற்சவ நாள்களில் மாட வீதியில் நடைபெறும் வாகனச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவின் 8-ஆம் நாள் காலையில் நடைபெறும் தேரோட்டம், நிறைவு நாளன்று காலையில் நடைபெறும் தீா்த்தவாரி ஆகியவற்றையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் காலை, இரவு வேளைகளில் உற்சவா்கள் கோயிலுக்குள் மட்டுமே வலம் வருவா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறும் ஸ்ரீராம நவமி உற்சவம் மற்றும் ஏப்ரல் 5 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவம் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகின்றன.

வழக்கமாக, பிரம்மோற்சவ வாகன சேவையைக் காண நூற்றுக்கணக்கான பக்தா்கள் கோயிலில் கூடுவா். அதனால் மாடவீதியைச் சுற்றி விழாக்கோலம் பூண்டிருக்கும். மாடவீதியைச் சுற்றிலும் கடைகள், குழந்தைகளுக்கு ராட்டினம் உள்ளிட்டவை நிறைந்திருக்கும். முதல் முறையாக தேவஸ்தான கோயிலில் பக்தா்கள் இல்லாமல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com