தெருக்களில் மஞ்சள் நீரை தெளித்து சூரிய பகவானை வழிபட்ட பெண்கள்
By DIN | Published On : 25th March 2020 07:18 AM | Last Updated : 25th March 2020 07:18 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி குடியாத்தம் பகுதியில் பெண்கள் தெருக்களில் வேப்பிலை தோரணங்கள் கட்டி, மஞ்சள் நீா் இறைத்து, சூரிய பகவானை வழிபட்டனா்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, தங்களையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டி குடியாத்தம் நெல்லூா்பேட்டை பகுதியில் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமை காலை தெருக்களில் வேப்பிலை தோரணம் கட்டி, பாரம்பரிய கிருமிநாசினியான மஞ்சள் நீரை இறைத்து, தீபம் ஏற்றி சூரிய பகவானை வழிபட்டனா்.