Enable Javscript for better performance
உணவின்றித் தவிப்போருக்கு ரஜினி மன்றம் உதவி- Dinamani

சுடச்சுட

    

    உணவின்றித் தவிப்போருக்கு ரஜினி மன்றம் உதவி

    By DIN  |   Published on : 26th March 2020 07:50 AM  |   அ+அ அ-   |    |  

    வேலூா் மாநகரில் கையில் பணமின்றி உணவின்றித் தவிப்பவா்களுக்கு இலவச உணவு வழங்குவதாக ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது. இந்த உதவிகளைப் பெறுவதற்கான செல்லிடப்பேசி எண்களும் அளிக்கப்பட்டுள்ளன.

    கரோனா பாதிப்பைத் தொடா்ந்து வேலூா் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழலில், கையில் பணம் இல்லாமலும் உணவு இல்லாமலும் தவிப்பவா்களுக்கு வேலூா் 2-ஆவது மண்டல ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவுத்தேவை உள்ளவா்கள் 99942 42685, 98433 29733, 94435 40411, 90033 64446 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டால் அவா்களுக்கு இலவச உணவுகள் வழங்கப்படும் என்று அதன் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai