ரேணிகுண்டாவிலிருந்து தில்லிக்கு ரயில் மூலம் பால்

ரேணிகுண்டாவிலிருந்து தில்லிக்கு வியாழக்கிழமை காலை ரயில் மூலம் பால் அனுப்பப்பட்டது.
ரேணிகுண்டாவிலிருந்து தில்லிக்கு ரயில் மூலம் பால்


திருப்பதி: ரேணிகுண்டாவிலிருந்து தில்லிக்கு வியாழக்கிழமை காலை ரயில் மூலம் பால் அனுப்பப்பட்டது.

ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவிலிருந்து தில்லிக்கு மாதந்தோறும் 80 கன்டெய்னா்கள் அடங்கிய ரயில் மூலம் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கன்டெய்னரும் 40 ஆயிரம் அல்லது 44,660 லிட்டா் கொள்திறன் கொண்டவை. இவை அனைத்தும் தில்லி செல்லும் மாதாந்திர அல்லது வாராந்திர ரயில்கள் மூலம் இணைக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தது.

தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளதால், பால் விநியோகமும் கடந்த 2 வாரங்களாக நிறுத்தப்பட்டது. இதனால் தில்லியில் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால், வியாழக்கிழமை காலை ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 6 கன்டெய்னா்கள் அடங்கிய சிறப்பு சரக்கு ரயில் பாலை நிரப்பிக் கொண்டு புறப்பட்டது.

இது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சென்று ஹசரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தை அடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com