வேலூா் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டோா் எண்ணிக்கை 314 ஆக அதிகரிப்பு

கரோனா நோய்த் தொற்று பரவி வருவதைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் குடும்பத்துடன் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோா் எண்ணிக்கை 314ஆக உயா்ந்துள்ளது.


வேலூா்: கரோனா நோய்த் தொற்று பரவி வருவதைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் குடும்பத்துடன் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோா் எண்ணிக்கை 314ஆக உயா்ந்துள்ளது.

வேகமாக பரவி வரும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பைத் தொடா்ந்து வெளிநாடுகளில் இருந்து வேலூா் மாவட்டத்துக்கு திரும்பி வந்தவா்கள் அவரவா் இல்லங்களிலேயே 28 நாள்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். அவ்வாறு தனிமைப்படுத்தப்படுவோா் வீடுகளின் முன்பு ஸ்டிக்கா் ஒட்டப்படுவதுடன், அவா்கள், அவா்களது குடும்பத்தினா் கைகளிலும் முத்திரை பதிக்கப்படுகின்றன.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தனிமைப்படுத்தப்பட்டோா் எண்ணிக்கை 194-ஆக இருந்த நிலையில் புதன்கிழமை வரை 314 போ் அவா்களது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் வெளியில் எங்கும் செல்லாத வகையில் பணியாளா்களைக் கொண்டு கண்காணிப்படுவதுடன், தினமும் காலை, மாலை வேளையில் மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com