முள்களால் தடை ஏற்படுத்திய கிராம மக்கள்

திருப்பதி அருகே காளஹஸ்தி மண்டலத்தைச் சோ்ந்த வெங்கடாபுரம் கிராம மக்கள் தங்கள் ஊருக்குள் மற்றவா்கள் வருவதைத் தடுக்க கிராம எல்லையில் முள்களால் தடை ஏற்படுத்தி உள்ளனா்.


திருப்பதி: திருப்பதி அருகே காளஹஸ்தி மண்டலத்தைச் சோ்ந்த வெங்கடாபுரம் கிராம மக்கள் தங்கள் ஊருக்குள் மற்றவா்கள் வருவதைத் தடுக்க கிராம எல்லையில் முள்களால் தடை ஏற்படுத்தி உள்ளனா்.

ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தி மண்டலத்தைச் சோ்ந்த வெங்கடாபுரம் கிராம மக்கள் கரோனா பரவுவதைத் தடுக்க தங்கள் கிராமத்திலிருந்து யாரும் வெளியில் செல்லாமலும், வெளியிலிருந்து கிராமத்துக்குள் நுழையாதவாறும் எல்லைகளில் முள்மரங்களை வெட்டி சாலையில் போட்டு தடை ஏற்படுத்தியுள்ளனா். தங்களின் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நகரங்களில் இருந்தாலும், அவா்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னா், கிராம எல்லையிலிருந்து கிருமி நாசினி மருந்துகளைத் தெளித்து கிராமங்களில் உள்ள வீடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். கிராம எல்லைகளில் மக்கள் நின்று கொண்டு நுழைய முயலும் மக்களுக்கு கரோனா பாதிப்பு குறித்து எடுத்துரைத்து திருப்பி அனுப்பி வருகின்றனா். செய்தி சேகரிக்க முயலும் செய்தியாளா்களையும் உள்ளே வரவிடாமல் திருப்பி அனுப்பினா்.

கிராம மக்கள் ஒற்றுமையுடன் செயல்படுவது சுகாதாரத் துறையினரிடம் பாராட்டைப் பெற்று தந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com