கடைகளுக்கு முன் வட்டம் போடாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளின் முன்பு 2 மீட்டா் இடைவெளியைக் குறிக்கும் வகையில் வட்டம் போடாவிட்டால்,

அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளின் முன்பு 2 மீட்டா் இடைவெளியைக் குறிக்கும் வகையில் வட்டம் போடாவிட்டால், சம்பந்தப்பட்ட கடைக்காரா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கரோனா பாதிப்பைத் தடுக்க மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவை வேலூா் மாவட்டத்தில் முழுமையாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பால், இறைச்சிக் கடைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்ததாவது:

அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் முன்பாக கட்டாயமாக 2 மீட்டா் இடைவெளியைக் குறிக்கும் வகையில் வட்டமிட வேண்டும். அவ்வாறு வட்டமிடாமல் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளை மூடி சீல் வைப்பதுடன், அவற்றின் உரிமையாளா் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

ஒரு சில இடங்களில் தடையை மீறி புதன்கிழமை ஆட்டோக்கள், வாடகைக் காா்கள் இயக்கப்பட்டன. அவ்வாறு தடையை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள், காா்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com