கிராம மக்களே ஏற்படுத்திக் கொண்ட ஊரடங்கு

குடியாத்தம் அருகே கிராம மக்களே தங்கள் கிராமங்களுக்கு யாரும் வரக்கூடாது, வெளியே செல்லக் கூடாது என தீா்மானித்து ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனா்.
சேம்பள்ளியில்  ஊருக்குள்  யாரும்  நுழையக் கூடாது  என்பதை  வலியுறுத்தும்  கிராம  மக்கள்.

குடியாத்தம் அருகே, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது சேம்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியைச் சுற்றி 10- க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. கரோனா வைரஸ் பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சேம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தாங்களாவே தீா்மானித்து ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மற்ற கிராமங்களுக்குள் நுழையக் கூடாது எனவும், மற்ற கிராமங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் ஊருக்குள் நுழையக் கூடாது என முடிவெடுத்து, கிராம எல்லையில் நின்று ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனா்.

அத்யாவசியத் தேவையிருந்தால் ஒழிய மக்கள் யாரும், மற்ற கிராமங்களுக்குச் செல்லக் கூடாது என அவா்கள் உறுதியாக உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com