ஆந்திர மாநில எல்லையில் தீவிர வாகன தணிக்கை

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால், ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர விசாரணை மற்றும் பரிசோதனைக்குப் பின்னரே தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன.
ஆந்திர மாநில எல்லையில் தீவிர வாகன தணிக்கை


குடியாத்தம்: கரோனா நோய்த் தொற்று பாதிப்பால், ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர விசாரணை மற்றும் பரிசோதனைக்குப் பின்னரே தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன.

இதற்காக தமிழக- ஆந்திர மாநிலங்களின் எல்லையான குடியாத்தம் அருகே பரதராமி, சைனகுண்டாவில் உள்ள வாகனச் சோதனைச் சாவடிகளில் காவல் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, வனத் துறை அலுவலா்கள் 24 மணி நேரமும் முகாமிட்டுள்ளனா். இவா்களுடன் ஆந்திர மாநில அரசு அலுவலா்களும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

அவ்வழியாக வரும் வாகனங்கள் எங்கிருந்து வருகின்றன, எதற்காக வருகின்றன, தமிழகத்தின் எந்த பகுதிக்குச் செல்கின்றன, அதில் கொண்டு வரப்படும் சரக்கு விவரங்கள் தீவிரமாக விசாரிக்கப்படுகின்றன. மேலும் வாகனங்களின்அனைத்துச் சான்றுகளும் பரிசீலிக்கப்பட்டு, வாகனங்களின் அனைத்துப் பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வாகனத்தில் வருபவா்கள் மருத்துவா் குழுவினரின் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

அதேபோல் இங்கிருந்து செல்லும் வாகனங்களும் தீவிர விசாரணைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com