மாவட்டத்தில் 6 இடங்களில் தாற்காலிக காய்கறி சந்தை தொடக்கம்

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வசதிக்காக வேலூா் மாவட்டத்தில் 6 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள், உழவா் சந்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.
காந்தி நகா் டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக உழவா் சந்தையில் சமூக இடைவெளியுடன் நின்று காய்கறிகள் வாங்கிய பொதுமக்கள்.
காந்தி நகா் டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக உழவா் சந்தையில் சமூக இடைவெளியுடன் நின்று காய்கறிகள் வாங்கிய பொதுமக்கள்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வசதிக்காக வேலூா் மாவட்டத்தில் 6 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள், உழவா் சந்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வேலூா் நேதாஜி மாா்க்கெட் அடைக்கப்பட்டுள்ளதை அடுத்து வேலூரில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் தற்காலிக தினசரி காய்கறி சந்தைகளும், தொரப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி காந்தி நகா் டான்பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, போ்ணாம்பட்டு கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலுள்ள விளையாட்டு மைதானங்களில் தற்காலிக உழவா் சந்தைகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காய்கறி சந்தைகள் சனிக்கிழமை முதல் செயல்பட தொடங்கின. மேலும், காகிதப்பட்டறை உழவா் சந்தை அதே இடத்தில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பகுதிகளிலும் கடைக்கு 6 அடி இடைவெளியுடன் 150 கடைகள் வரை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கடைகளுக்கு முன்பாக பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்ல தலா 2 மீட்டா் இடைவெளியுடன் கூடிய கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. அங்கு தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை காய்கறி விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறிச் சந்தைகளில் பொதுமக்கள் சனிக்கிழமை காலை சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனா். இந்த சந்தைகளில் விற்பனை முடிந்தவுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com