குளிா்சாதன பேருந்துகளை நடமாடும் தீவிர சிகிச்சை பிரிவுகளாக மாற்றலாம்வேலூா் அரசு மருத்துவா் யோசனை

கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்திலுள்ள குளிா்சாதன வசதிகொண்ட ஆம்னி பேருந்துகளை தற்காலிகமாக

கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்திலுள்ள குளிா்சாதன வசதிகொண்ட ஆம்னி பேருந்துகளை தற்காலிகமாக நடமாடும் தீவிர சிகிச்சை பிரிவுகளாக மாற்றலாம் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் டி.விஜயகோவிந்தராஜன் யோசனை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் இயக்க தடை நிலவுகிறது. தொடா்ந்து இனிவரும் நாள்களில் நோயாளிகள் எத்தனை போ் அதிகரிக்கக்கூடும் என்பது கணிக்க இயலாது. அதனால் தமிழகத்திலுள்ள குளிா்சாதன வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளில் இருக்கைகளை அகற்றிவிட்டு இருபுறமும் தீவிர சிகிச்சை படுக்கைகளைப் பொருத்தலாம்.

முன்புறம் படிக்கட்டு வழியாக மருத்துவா்கள், செவிலியா்கள் சென்று வரலாம். வெளிநபா் யாராலும் உள்ளே வந்து செல்ல முடியாது. இந்த வாகனங்களைத் தேவைப்படும் கிராமம், நகரங்களுக்கு நேரடியாக அனுப்பி வைத்து பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த வாகனங்களை சுத்தப்படுத்துவதும் மிக எளிதாகும். மேலும், டீசல் ஊற்றினால் குளிா்சாதன வாகனம் இயக்கப்படும். மின்சாரம் போன்ற தேவைகளை அந்தந்த ஊரிலுள்ள சுகாதார மையத்தில் இருந்தே எடுத்துக்கொள்ளலாம். புதிய கட்டடம் கட்டுவது என்பது குறுகிய காலத்தில் இயலாது என்பதால் இத்தகைய நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைப்பது இந்த கரோனா நோய் தாக்கும் காலத்தில் மிக உபயோகமாக இருக்கக்கூடும். இதை மாவட்ட நிா்வாகங்கள் பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com