குடியாத்தம் கெங்கையம்மனுக்கு திருக்கல்யாணம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
குடியாத்தம்  கெங்கையம்மனுக்கு  நடைபெற்ற திருக் கல்யாணம்.
குடியாத்தம்  கெங்கையம்மனுக்கு  நடைபெற்ற திருக் கல்யாணம்.

குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் தேதி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி 15 நாள்களுக்கு முன் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இத்திருவிழாவை முன்னிட்டு வேலூா் மாவட்டத்திற்கு அரசு பொதுவிடுமுறை அளிக்கப்படும். பொது முடக்கம் காரணமாக இந்த ஆண்டு திருவிழாவை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கெங்கையம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஒரு சில அா்ச்சகா்கள் மட்டுமே பங்கேற்று எளிய முறையில் அம்மன் திருக்கல்யாணத்தை நடத்தினா். கோயில் நிா்வாக அதிகாரி காா்த்திகேயன், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத் ஆகியோா் பங்கேற்றனா்.

கோயிலில் டிஎஸ்பி என்.சரவணன், காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com