5 மாவட்டங்களைச் சேர்ந்த 1,464 பேர் ஜார்க்கண்டுக்கு சிறப்பு ரயிலில் அனுப்பி வைப்பு

காட்பாடி ரயில்நிலையத்தில் இருந்து 7ஆவது கட்டமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச்
5 மாவட்டங்களைச் சேர்ந்த 1,464 பேர் ஜார்க்கண்டுக்கு சிறப்பு ரயிலில் அனுப்பி வைப்பு

காட்பாடி ரயில்நிலையத்தில் இருந்து 7ஆவது கட்டமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,464 பேர் சிறப்பு ரயில் மூலம் வெள்ளிக் கிழமை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம், காட்பாடியில் இருந்து இயக்கப்பட்ட 7 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 7,703 பேர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த வடமாநிலங்களைச் சேர்ந்த 9,093 பேர் சிகிச்சை முடிந்த நிலையில், அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப முடியாமல் பாதிக்கப் பட்டனர். அவர்கள் படிப்படியாக சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வேலைக்காக வந்த ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதன்படி, வேலூருக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, விழுப்புரம் மாவட்டங்களில் வேலைக்காக வந்திருந்த தொழிலாளர்கள் என ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,464 பேர் பேருந்துகள் காட்பாடி ரயில்நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மதியம் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, காட்பாடியில் இருந்து மதியம் ஒரு மணியளவில் கிளம்பிய சிறப்பு ரயில் மூலம் அவர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக, அவர்கள் அனைவருக்கும் அவரவர் மாவட்டங்களில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு தனிப்பேருந்துகள் மூலம் காட்பாடி ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். 

பின்னர், அங்கிருந்து சிறறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்தவகையில், காட்பாடி ரயில்நிலையத்தில் இருந்து இதுவரை 7 சிறப்பு ரயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன. அதில், முதல்கட்டமாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,140 பேர் கடந்த 6-ஆம் தேதி இரவும், 2-ஆம் கட்டமாக அதே மாநிலத்தைச் சேர்ந்த 1,131 பேர் 8-ஆம் தேதி இரவும், 3-ஆம் கட்டமாக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 1,139 பேர் 9-ஆம் தேதி இரவும், 4-ஆவது கட்டமாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 1,142 பேர் திங்கள்கிழமையும், 5-ஆவது கட்டமாக அதே மாநிலத்தைச் சேர்ந்த 1,464 பேர் செவ்வாய்க்கிழமையும், 6-ஆவது கட்டமாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 145 பேரும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். 

தொடர்ந்து, 7ஆவது கட்டமாக  ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,464 பேர் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் இதுவரை 7,703 பேர் காட்பாடியில் இருந்து வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com