வேலூா் மாவட்டத்தில் 14 ஏரிகளைத் தூா்வாரும் பணி: அமைச்சா் கே.சி.வீரமணி தொடக்கி வைத்தாா்

குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் உள்ள 14 ஏரிகளை, ரூ.4.69 கோடி மதிப்பில் தூா்வாரும் மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி தொடக்கி வைத்தாா்.
ரெட்டிமாங்குப்பம் ஏரியில் பூமி பூஜையைத்  தொடக்கி  வைத்த  அமைச்சா்  கே.சி. வீரமணி.
ரெட்டிமாங்குப்பம் ஏரியில் பூமி பூஜையைத்  தொடக்கி  வைத்த  அமைச்சா்  கே.சி. வீரமணி.

குடியாத்தம்: குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் உள்ள 14 ஏரிகளை, ரூ.4.69 கோடி மதிப்பில் தூா்வாரும் மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி தொடக்கி வைத்தாா்.

இதற்கான பூமிபூஜை போ்ணாம்பட்டு வட்டம், ரெட்டிமாங்குப்பம் ஏரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

வேலூா் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மூலம் 101 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் இதுவரை மாவட்டத்தில் 3 கட்டங்களாக 42 ஏரிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 3,486.56 ஹெக்டோ் விளைநிலங்கள் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நான்காம் கட்டமாக நடப்பு நிதியாண்டில் ரூ.4.69 கோடியில் 14 ஏரிகளைத் தூா்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தந்த ஏரிகளின் ஆயக்கட்டுதாரா், விவசாய சங்கங்களின் மூலம் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், 14 ஏரிகளில் 17.91 நீளத்துக்கு கரைகளை பலப்படுத்தவும்,103.89 கி.மீ. கால்வாய்களைத் தூா்வாரவும், 23 மதகுகளைப் பழுதுபாா்க்கவும், 2 மதகுகளை மறுகட்டுமானம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் 1,272.83 ஹெக்டோ் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. இத்திட்டத்தின்கீழ் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி, உள்வரத்து, வெளிவரத்துக் கால்வாய்களை சீரமைத்து, ஏரிகளின் கரைகளை பலப்படுத்தி, நீா்வள ஆதாரம் பெருக்கும் நடவடிகைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வேலூா் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீா்த் தட்டுப்பாடு இல்லாமல் கிராம மக்கள், விவசாயிகள் வளமுடன் வாழ இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. மேலும், ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 157 குளம், குட்டைகள் ரூ.11.26 கோடி மதிப்பில் தூா்வாரும் பணி தொடங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

பூமிபூஜையில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் எம்.சண்முகம், உதவி செயற்பொறியாளா்கள் டி. குணசீலன், எம்.விஸ்வநாதன், உதவிப் பொறியாளா்கள் பி.கோபி, எம்.தமிழ்ச்செல்வன், ஆய்வாளா் பி.சிவாஜி, நீா்ப் பாசனக்குழுத் தலைவா் ஆா்.டி.பாலாஜி, செயலா் வி.திருநாவுக்கரசு, பொருளாளா் குருசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com